CSK ஐ தடை செய்யுங்கள்: சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்

சென்னை: தமிழக வீரர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் இன்று தமிழக சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டுத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘‘தமிழர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் சிஎஸ்கே அணியில் ஒருவர் கூட இடம் பெறவில்லை. வெளிநாட்டு வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது,”

பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன்

எம்எல்ஏக்களுக்கு CSK 400 பாஸ்

அதேபோல், விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை குறித்து பேசிய அதிமுக எம்எல்ஏ வேலுமணி, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளைக் காண அதிமுக எம்எல்ஏக்களுக்கு பாஸ் தேவை என்று கோரிக்கை வைத்தார்.

அமைச்சர் உதயநிதியிடம் இந்த கோரிக்கையை வைத்த எம்எல்ஏ வேலுமணி, அதிமுக ஆட்சியில் எம்எல்ஏக்களுக்கு 400 பாஸ் வழங்கப்பட்டு தற்போது அதிமுக எம்எல்ஏக்களுக்கு மட்டும் பாஸ் வழங்கப்படுவதில்லை.


Patali Makkal Party (PMK) MLA Venkateswaran today demanded in the Tamil Nadu Legislative Assembly that the Chennai Super Kings team has to be banned because the team doesn’t have any players from Tamil Nadu.