சிஎஸ்கே விற்கு சோதனை காலம்

சிஎஸ்கே விற்கு சோதனை மேல் சோதனை.. ஐபிஎல் தொடரிலிருந்து முன்னணி வீரர் விலகல்? என்ன செய்ய போகிறார் தல?

ஐபிஎல் 15வது சீசன் வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கான ஏலம் அண்மையில் முடிந்தது.

10 அணிகளும் தங்களுக்கு விருப்பமான வீரர்களை தேர்வு செய்து, அணியை கட்டமைத்தனர். சிஎஸ்கே அணி 25 வீரர்களை தேர்வு செய்தது.

இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கு சோதனை மேல் சோதனையாக வருகிறது. இதனால் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தீபக் சாஹர் காயம்: ஏற்கனவே சிஎஸ்கே அணி 14 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து தீபக் சாஹரை வாங்கியது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3வது டி20 போட்டியில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று, உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ருத்துராஜ் காயம்: இதனால் தீபக் சாஹர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரரான ருத்துராஜ் கெய்க்வாட், கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டிக்காக பயிற்சி செய்யும் போது காயம் அடைந்ததால், கடைசி நேரத்தில் பங்கேற்கவில்லை

3 மாதம் ஓய்வு: தற்போது ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு ஸ்கேன் செய்யப்பட உள்ளது. அதன் முடிவு வந்த பிறகே, அறுவை சிகிச்சை தேவைப்படுமா இல்லை என்பது தெரியவரும். ஒரு வேலை அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தால் குறைந்தது 3 மாதம் ஓய்வில் இருக்க நேரிடும். இதனால் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தோனி கலக்கத்தில்: சென்னை அணி ருத்துராஜை தான் ஏலத்திற்கு முன்பே தக்கவைத்தது. கடந்த முறை சாம்பியன் பட்டத்தை சிஎஸ்கே வெல்ல ருத்துராஜ் முக்கிய காரணமாக இருந்துள்ளார். தற்போது அவர் விலகியுள்ளதால், தோனி கலக்கத்தில் உள்ளார். எனினும் சேனாபதி என்ற வீரரை சிஎஸ்கே தேர்வு செய்துள்ளது. அவர் ருத்துராஜ் இடத்தை நிரப்பலாம்.